புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 4 டிசம்பர் 2020 (07:52 IST)

படப்பிடிப்பிற்கு திடீரென வந்த இயக்குநரின் மனைவி: விஷால் ஆர்யா இன்ப அதிர்ச்சி

படப்பிடிப்பிற்கு திடீரென வந்த இயக்குநரின் மனைவி
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா நடித்து ’எனிமி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தபோது திடீரென இயக்குனர் ஆனந்த் சங்கரின் மனைவி திவ்யாங்கா படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்தார் 
 
மனைவியை படப்பிடிப்பில் சர்ப்ரைஸாக பார்த்த இயக்குனர் ஆனந்த் ஷங்கர் மட்டுமின்றி படப்பிடிப்பில் இருந்த விஷால் மற்றும் ஆர்யா ஆகிய இருவருமே இன்ப அதிர்ச்சி அடைந்தனர் தனது மனைவியின் வருகை குறித்து தனது டுவிட்டரில் பதிவு செய்த ஆனந்த் ஷங்கர் நீங்கள் இயக்குனர் வேலையை லைட் கேமரா ஆக்ஷன் என்று மட்டும் சொல்லிக்கொண்டு இருப்பீர்கள். ஆனால் மனைவியின் வருகை வந்தால் உடனே கூடுதல் கவனம் செலுத்துவீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார் இந்த பதிவிற்கு ரசிகர்கள் மக்களை தெரிவித்து வருகின்றனர்
 
கடந்த ஆண்டு ஆனந்த்சங்கர் மற்றும் திவ்யாங்கா ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற்றது என்பதும் இந்த திருமணத்தில் திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது