30 பவுன் நகைகளை விற்று ஆன்லைன் ரம்மி விளையாடிய கணவன் – நடுத்தெருவில் போராட்டம் நடத்திய மனைவி!
ஆன்லைனில் இழந்த பணத்தை எல்லாம் மீட்க மனைவியின் 30 பவுன் நகைகளை அடமானமாக வைத்து சூதாடியுள்ளார் கணவர் ஒருவர்.
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அடுத்த நத்தகாட்டூரைச் சேர்ந்த தமிழ்செல்வியும் மணிகண்டன் என்பவரும் காதலித்து வந்துள்ளார். ஆனால் இவர்கள் காதலுக்கு இரு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவிக்க திருமணம் செய்துகொண்டு தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் தமிழ்ச்செல்வியின் குடும்பம் அவர்களை ஏற்றுக்கொண்டுள்ளது. அதையடுத்து வரதட்சணையாக 30 பவுன் நகை கொடுத்துள்ளனர். ஆனால் அதன் பிறகு மணிகண்டனின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வேலைக்கு செல்லாமல் ஆன்லைனில் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களில் விளையாடுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார்.
மேலும் தனது மாமனார் வீட்டுக்கு செல்லும்போதேல்லாம் மாமனாரின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எப்படியோ எடுத்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த செல்வி அதுபற்றிக் கேட்க இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் செல்வி தனது தாய்வீட்டில் கொடுத்த நகைகளை எடுத்துப் பார்த்த போது அவை அணைத்தும் போலியாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதையடுத்து கணவரை பிரிந்த செல்வி காவல் நிலையத்தில் புகார் அளிக்க விசாரணையில் நகைகளை அடமானம் வைத்து சூதாட்டத்தில் பணத்தை இழந்ததை மணிகண்டன் ஒத்துக்கொண்டுள்ளார். அதனால் போலி நகைகளை மாற்றி வைத்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து 6 மாதத்தில் நகைகளை மீட்டுத் தருவதாக அவர் கூறியுள்ளார். ஆனால் அது சம்மந்தமாக எதுவும் நடக்காததால் செல்வி இப்போது மணிகண்டனின் வீட்டு முன்பு போராட்டம் நடத்தியுள்ளார்.