புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 26 நவம்பர் 2020 (19:37 IST)

மனைவியுடன் சாந்தனு நடிக்கும் படத்தின் டைட்டில்!

பிரபல இயக்குநர் கே பாக்யராஜ் மகன் சாந்தனு பாக்கியராஜ் மற்றும் அவரது மனைவி கிகிவிஜய்யும் இணைந்து ஒரு ஆல்பத்தில் நடிக்க உள்ளனர் என்பதும் இந்த ஆல்பத்தை பிரபல நடன இயக்குனர் பிருந்தா இயக்க இருப்பதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் தற்போது இந்த ஆல்பத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.  எங்க போற டி’ என்ற டைட்டில் இந்த ஆல்பத்திற்கு வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
தரண்குமார் இசையில் ஆர்ஜே விஜய் பாடல் வரிகளில் சாந்தனு பாடும் இந்த ஆல்பத்தை டாட் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்தப் ஆல்பத்தின் படப்பிடிப்பு விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
ஏற்கனவே நடன இயக்குனர் பிருந்தா ’ஹே அனாமிகா’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் அதில் துல்கர் சல்மான் மற்றும் காஜல் அகர்வால் இணைந்து நடித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே