புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 28 டிசம்பர் 2018 (08:21 IST)

நாயாக மாறிய அமலாபால்: வைரலாகும் புகைப்படம்

அமலாபால் தனது நாயுடன் செய்யும் சேட்டைகளை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த அமலாபால்  தமிழில் மைனா, தெய்வத்திருமகள். வேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2014ல் இயக்குநர் விஜய்யைக் காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமண பந்தம் நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. 2017ல் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற்ற இருவரும், தனித்தனியாக வசித்து வருகின்றனர். அதன்பிறகு தற்பொழுது நிறைய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் அமலா பால். அவ்வப்போது இணையத்தில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்புவார். சமீபத்தில் கூட சிகிரெட் பிடிப்பதுபோல புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார்.
இந்நிலையில் அமலா பால் தனது டிவிட்டர் பக்கத்தில், தான் வளர்க்கும் நாயுடன் விளையாடுவதை போட்டோ எடுத்து பதிவிட்டுள்ளார். அதில் நாய் தனது நாக்கை வெளியே நீட்டி இருப்பது போல அமலாபாலும் அதேவாறு செய்துள்ளார். எனது பொழுதை நாயுடன் சந்தோஷமாக செலவிட்டு வருகிறேன என அவர் பதுவிட்டுள்ளார். அமலாபால் வளர்ப்புப் பிராணிகள் பிரியை என்பது குறிப்பிடத்தக்கது.