திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 24 டிசம்பர் 2018 (15:35 IST)

சசிகுமாருடன் பைக்கில் உலாவரும் ரஜினி ! மெகா வைரல் புகைப்படம் இதோ!

பேட்ட படத்தின் பிரத்தியேக புகைப்படத்தை வெளியிட்டது  சன் பிக்சர்ஸ் நிறுவனம்.


 
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் படம் பேட்ட. ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, நவாஷுதின் சித்திக், த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, சசிகுமார் போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கின்றனர்.
 
படத்தின் ஒட்டுமொத்த பாடல்கள் 9-ம் தேதி வெளியாகி இணையத்தில் அனைவரையும் ஈர்த்து வருகிறது. இப்படத்தின் டீஸர் டிசம்பர் 12-ம் தேதியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளன்று காலை வெளியானது. பேட்ட படத்தின் ட்ரைலர் 2019 புத்தாண்டு அன்று மாலை வரும் என்று பேசப்பட்டு வருகிறது.
 
தற்போது இப்படத்தின் பிரத்தியேக புகைப்படம் ஒன்றை வெளியிட்டது தயாரிப்பு நிறுவனமான சன் பிச்சர். அதில் பைக்கில் சசிகுமாருடன் பின்னால் அமர்ந்தபடி ரஜினிகாந்த் இருப்பது போன்ற புகைப்படம் வெளியானது. சூப்பர்ஸ்டாரை வெவ்வேறு கோணத்தில் காண்பிக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜை பாராட்டி வருகின்றனர் ரஜினி ரசிகர்கள்.