செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 23 டிசம்பர் 2018 (15:59 IST)

செவ்வாய்கிரகத்தின் பனிப்பள்ளம் பற்றி தெரியுமா?

செவ்வாய் கிரகத்தின் கோரோலோவ் பள்ளத்தில் முழுவதுமாக பனி நிறைந்திருக்கும் புகைப்படமொன்று தற்போது வெளிவந்துள்ளது. 
 
ஐரோப்பிய விண்வெளி மையத்தின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் மிஷன் இப்புகைப்படங்களை எடுத்துள்ளது. ஐரோப்பிய விண்வெளி மையத்தின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் மிஷன் கடந்த 2003 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. 
 
ஆறு மாதங்கள் கழித்து செவ்வாய் கிரகத்தை அடைந்த இந்த விண்வெளி ஆராய்ச்சித் திட்டத்தின் 15 வது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் விதமாக இப்புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
 
கோரோலோவ் பள்ளம் செவ்வாய் கிரகத்தின் வடக்கு தாழ்நிலப்பகுதியில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இப்பெரும் பள்ளம் பனியால் நிறைந்ததல்ல, பனிக்கட்டிகளால் நிறைந்தது.
 
பள்ளத்தின் மையத்தில் பெரும் பனிக்கட்டிகள் உள்ளன. அதாவது சுமார் 1.8 கி.மீ அடர்த்தியுடன் இப்பனிக்கட்டிகள் உள்ளன. பள்ளத்தின் ஆழம் கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் அளவுக்கு இருக்கிறது.