அமெரிக்காவில் காளியும்-மாரியும்: கலக்கலான புகைப்படம்

Last Modified வியாழன், 27 டிசம்பர் 2018 (08:12 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் குடும்பத்தினர்களுடன் அமெரிக்காவுக்கு ஓய்வு எடுக்க சென்றார் என்பது தெரிந்ததே. மனைவி, மகள்கள், மருமகன் தனுஷுடன் அமெரிக்கா சென்றுள்ள ரஜினி ஜனவரி முதல் வாரத்தில் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சற்றுமுன் ரஜினியும், தனுஷூம் அமெரிக்காவில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தனுஷ் தோள்மீது கைபோட்டு ரஜினி தனது டிரேட் மார்க் சிரிப்புடன் இருக்கும் இந்த புகைப்படம் ரஜினி, தனுஷ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.


'பேட்ட' படத்தில் ரஜினிகாந்த் 'காளி' என்ற கேரக்டரில் நடித்திருக்கும் நிலையில் 'காளியும் மாரியும்' உள்ள கலக்கலான புகைப்படம் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :