அடிக்கடி பெயர் மாறும் அமலா பால் படம்!!
அமலா பால், விஷ்ணு விஷால் நடித்துவரும் படத்தின் பெயர் அடிக்கடி மாற்றப்பட்டு வருகிறது.
‘முண்டாசுப்பட்டி’ ராம்குமார் தற்போது விஷ்ணு விஷாலை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். விஷ்ணு விஷால் போலீஸாக நடிக்கும் இந்தப் படத்தில், அமலா பால் ஹீரோயினாக நடிக்கிறார். சைக்கோ த்ரில்லராக இந்தப் படம் உருவாகி வருகிறது.
இந்தப் படத்துக்கு முதலில் ‘சிண்ட்ரெல்லா’ எனப் பெயர் வைக்கப்பட்டது. பின்னர் அதை மாற்றி ‘மின்மினி’ என வைத்தனர்.
பிறகு அதையும் மாற்றி ‘ராட்ச்சசன்’ என்று வைத்தனர். இப்போது அந்த டைட்டிலும் மாறலாம் என்கிறார்கள். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நடிக்கும் இந்தப் படத்தில், அமலா பால் டீச்சராக நடிக்கிறார்.uu