"ஆடை" படத்திற்காக மாறுவேடத்தில் அமலா பால் செய்த செயல் - வைரலாகும் வீடியோ!
ஆடையின்றி அமலா பால் மிகுந்த துணிச்சலோடு நடித்த "ஆடை" படம் கடந்த 19ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பெரும் சர்ச்சைகளுக்கிடையில் வெளிவந்த இப்படத்தை பார்க்க சென்ற ஆடியன்ஸ்ஸை தியேட்டர் வாசலில் நின்றுக்கொண்டு படத்தை பற்றிய கருத்தை அமலா பால் மாறுவேடமிட்டு கேட்டுள்ளார்.
அதில் ஒரு சிலர் பேட்டி எடுப்பது அமலாபால் என்று தெரியாமல் படத்தைப்பற்றிய கருத்துக்களை கூறினார்கள் அதன் பின்னர் நான் தான் அமலாபால் என்று அமலாபால் தன்னை அறிமுகம் செய்ததும் ரசிகர்கள் ஷாக் அடைந்துள்ளனர். இந்த வீடியோவை அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட தற்போது அதிக அளவில் இணையத்தில் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.