தடை செய்யப்படுமா ஆடை? பூதாகரமாக கிளம்பிய புகார்கள்

aadai
Last Modified வியாழன், 18 ஜூலை 2019 (20:15 IST)
”மேயாத மான்” இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் “ஆடை”. இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியான நாள் முதற்கொண்டே பல்வேறு எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் பாமகவிலிருந்து பிரிந்து அனைத்து அரசியல் மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கிய ராஜேஸ்வரி பிரியா டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் ”வரும் 19ம் தேதி அமலாபால் நடித்துள்ள “ஆடை” திரைப்படம் வெளியாக உள்ளது. அந்த படத்தின் ட்ரெய்லர் வெளியானபோதே பல்வேறு சர்ச்சைகளுக்குள்ளானது. பெண்கள், குழந்தைகள் பாலியல்ரீதியாக பல பிரச்சினைகளை சந்தித்து வரும் இந்த நிலையில் இப்படி ஒரு படம் வெளிவருவது அதிர்ச்சியளிக்கிறது.

இந்த படத்தை விளம்பரப்படுத்த ஆபாசமான சுவரொட்டிகள், விளம்பர உத்திகளை மேற்கொள்கிறார்கள். உடனே தாங்கள் இது போன்ற விளம்பரங்களை தடை செய்து உத்தரவிட வேண்டும். அதில் தங்களுக்கு ஏதாவது பிரச்சினை இருக்கும் பட்சத்தில் நாங்கள் களத்தில் இறங்கி பெண்கள் பாதுகாப்பிற்காகவும், தமிழ் கலாச்சாரத்திற்காகவும் போராடுவோம்” என குறிப்பிட்டுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :