அமலா பாலின் "ஆடை" திரைவிமர்சனம்

Last Updated: சனி, 20 ஜூலை 2019 (15:01 IST)
நிர்வாண உடலை அப்படியே காண்பித்து பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய அமலா பாலின் ஆடை திரைப்படம் பெரும் எதிர்ப்புகளுக்கிடையில் இன்று திரைக்கு வந்துள்ளது. மக்கள் மத்தியில் இப்படம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளதா என்ற விமர்சனத்தை இங்கே காணலாம். 


 
இயக்குனர்:  ரத்னகுமார் 
தயாரிப்பாளர்:  விஜய் சுப்பிரமணியன் 
இசை: பிரதீப் குமார் ,ஊர்க்கா 
நடிகர்கள்: அமலா பால், விஜே ரம்யா, சரித்திரன் , விவேக் பிரசன்னா, 
ஒளிப்பதிவு : விஜய் கார்த்திக் 
 
கதைக்கரு: 
 
நங்கொளி என்ற போராளியின் கதையில் இருந்து "ஆடை" படம் ஆரம்பமாகிறது. அவர் மார்பகங்களை மறைக்க வரி கட்டவேண்டும் என்ற சட்டத்தை எதிர்த்து போராடி வெற்றி கண்டவர். 
 
ஒரு பெண் ஆடையே இல்லாமல் ஒரு இடத்தில் சிக்கிக்கொண்டால் என்ன ஆகும் அதில் எப்படி தப்பிக்கிறாள் என்பது தான் இப்படத்தின் ஒன்லைன் ஸ்டோரி. காமினி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள அமலா பால் தந்தை இன்றி தாயின் அட்வைஸில் வளர்ந்து வருபவர். இவர் பிரபல சேனல் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு பல ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள் கூடவே ஒரே ஒரு பெண் தோழி விஜே ரம்யாவும் இருக்கிறார். 
 
அம்மா கொடுக்கும் அட்வைஸ்களை அலட்சியமாக எண்ணி தன் இஷ்டத்துக்கு நடந்துகொள்ளும் காமினியிடம் யாரவது "உன்னால் இதை செய்ய முடியுமா"? என சந்தேகமாக கேட்டால் போதும் உடனே அவர்களிடம் பெட் கட்டி அது எப்பேற்பட்ட காரியமாக இருந்தாலும் அதை செய்து காட்டிடுவார். பெட் கட்டு கட்டுதலுக்கு அடிமையான காமினி, குடி போதை, புகைப்பழக்கம், ஆண் நண்பர்களின் சவகாசம்  என எதையும் விட்டுவைக்காமல் அத்தனையும் செய்துவருகிறார். 
 
காமினி பொதுமக்களிடம் சென்று பிராங்க் ஷோ நடத்தி வருபவர். கூடவே  KTM பைக் ஓட்டுற பசங்களோட ரேஸ் அடிக்குறார். அவளுக்கு ஜால்ரா தட்டுற ஒரு காதலன். இப்படி பெண்களுக்கான அத்தனை அம்சங்களையும் மீறி தான் இஷ்டத்துக்கு ஆடி வருகிறார். ஒரு கட்டத்தில் தான் பணியாற்றி வரும் தொலைக்காட்சி  கட்டிடத்தை வேறு இடத்திற்கு மாற்றுகின்றனர். அன்று தான் அமலா பாலின் பிறந்தநாள். அன்றிரவு தன்  அந்த  பிறந்த நாள் பார்ட்டியை கொண்டாடுகின்றனர். 
 
அப்போது  தான் இந்த கட்டுப்பாடில்லாத காரியம் அரங்கேறுகிறது. குடித்துவிட்டு புஃல் போதையில் தன் ஆண் நண்பர்களிடம் அந்த இரவு முழுவதும் ஆடையின்றி இருப்போம். பிறக்கும் போது ஆடை அணிந்தா பிறந்தோம்? எனவே ஆடையில்லாமல் பிறந்தநாள் கொண்டாடுவது தான் சரியான பிறந்தநாள் கொண்டாட்டம் என கூறி பெட் கட்டுகிறார். காலையில் விழித்து பார்க்கும்போது அவர் ஆடையில்லாமல்  நிர்வாணமாக இருக்கிறார். அந்த பில்டிங் முழுவதும், அவரது உடலை மறைக்க ஒரு ஒட்டு துணி கூட இல்லை. பின்னர் அந்த நிர்வாண உடலோடு அந்த இடத்திலிருந்து எப்படி தப்பிக்கிறார். இதற்கெல்லாம் காரணம் யார் என்பது தான் இப்படத்தின் மீதி கதை. 
 
படத்தின் ப்ளஸ்: 
 
ஹீரோவே தேவைப்படல ஹீரோயினா அமலா பாலே எல்லா வேலையும் பண்ணுறாங்க. அவரின் நடிப்பு பாராட்டப்பட கூடியதாக அமைந்துள்ளது. இயக்குனரின் திரைக்கோணம் வித்யாசமான கண்ணோட்டத்தில் அமைந்துள்ளது. படத்தின் ஒளிப்பதிவு மிக அற்புதமாக அமைந்துள்ளது. படத்தில் சவுக்கடி வசனங்கள் இடம் பெற்றுள்ளது. ஒரு தரமான கருத்துடன் இப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒளிப்பதிவில் நிர்வாணமான அமலா பாலை துளி கூட ஆமாசமின்றி காட்டியுள்ளனர். 
 
படத்தின் மைனஸ்:
 
வசனங்கள் ஒரு கட்டத்திற்கு மேல் மக்களை சலிப்படைய வைத்துள்ளது.  தேவையில்லாத வசங்களுக்கும் படத்திற்கு சமந்தமேயில்லாத வசனங்களும் இடப்பெற்றுள்ளது. மொத்தத்தில், சில குறைகள் தாண்டி, அமலா பாலின் தைரியமான முயற்சிக்காக ஆடை படத்தை ஒரு முறை பார்க்கலாம். ஆடை "எ" படமென்றாலும் படத்தை பார்த்து வெளிவரும் போதும் ஆபாசமாக எதுவுமில்லை என்கிற எண்ணத்தை வரவைத்துவிடுகிறார் ரத்னகுமார். 
 
ஆடை படத்திற்கு வெப்தளனியாவின் மதிப்பு 3\5


இதில் மேலும் படிக்கவும் :