திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 19 ஜூலை 2019 (18:40 IST)

ஆடை படம் ரிலீஸாகிறது - சம்பளத்தை விட்டுகொடுத்த அமலா பால்

ஆடை திரைப்படம் வெளியாவதில் ஏற்பட்டுள்ள சிக்கலை தீர்க்க தனது சம்பளத்தின் ஒரு பகுதியை அமலா பால் விட்டுக்கொடுத்துள்ளார்.

“மேயாத மான்” இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்துள்ள படம் ஆடை. இந்த படம் இன்று வெளியாகவிருந்த நிலையில் தயாரிப்பாளர் தரப்பில் ஏற்பட்ட பிரச்சினையால் காலை காட்சிகள் ரத்தாகி உள்ளன. இதனால் படம் பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

அமலா பால் தனக்கு இந்த படம் பெரும் திருப்புமுனையாக இருக்கும் என நம்புகிறார். இதனால் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரோடு விவாதித்த அமலா பால் பண விவகாரத்தை முடித்து வைத்து படத்தை வெளியிட செய்திருக்கிறார். நடிப்பதற்காக தான் வாங்கிய சம்பளத்தின் ஒரு பகுதியை விட்டுக்கொடுத்து பட ரிலீஸுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இதனால் ஆடை திரைப்படம் இன்று மாலை அல்லது நாளை காலை முதல் திரையரங்குகளில் திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.