1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 23 ஏப்ரல் 2018 (18:14 IST)

என் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த 'என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா' என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் உருவாகி தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்த்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த படம் வரும் மே மாதம் 4ஆம் தேதி நான்கு மொழிகளிலும் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தமிழகத்தில் உள்ள பெரும் நகரங்களில் அதிகளவில் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. சமீபகாலமாக மகேஷ்பாபு, பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர் போன்ற தெலுங்கு நடிகர்களின் படங்கள் நேரடியாக தமிழகத்தில் பெருவாரியான திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூலை குவித்து வருகிறது. அந்த வரிசையில் அல்லு அர்ஜூன் நடித்த இந்த படமும் நல்ல வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
அல்லு அர்ஜூன், அனு இமானுவேல், அர்ஜூன், சரத்குமார், உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தை வம்சி இயக்கியுள்ளார். விஷால் சங்கர் இசையில் ராஜீவ் ரவி ஒளிப்பதிவில், வெங்கடேஸ்வரராவ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.