ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: வியாழன், 22 பிப்ரவரி 2018 (18:02 IST)

சென்னையில் படமாகிறது அல்லு அர்ஜுனின் ‘நா பேரு சூர்யா’

அல்லு அர்ஜுன் நடித்து வரும் ‘நா பேரு சூர்யா’ படத்தின் ஷூட்டிங், சென்னையில் நடைபெற்று வருகிறது.

 
வக்கந்தம் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் தெலுங்குப் படம் ‘நா பேரு சூர்யா, நா இல்லு இண்டியா’. இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன், ‘ஆக்‌ஷன் கிங்’ அர்ஜுன், சரத்குமார் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். ராணுவத்தைப் பற்றிய கதை இது. ராணுவ அதிகாரி கோபத்தை எப்படிக் கையாள வேண்டும் என்பதைப் பற்றிய படம் இது.
 
இந்தப் படத்தின் ஷூட்டிங், சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு ஹெல்த் சிட்டியில் நடைபெற்று வருகிறது. அங்குள்ள ஆடிட்டோரியத்தில் முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.