வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 2 மார்ச் 2019 (11:42 IST)

தனுஷ், கார்த்திக் சுப்பராஜ் படத்தில் அல் பசீனோ ? – தாமதத்தின் பின்னணி !

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட படம் இன்னும் ஆரம்பிக்கப் படாமல் இருப்பதற்கு ஹாலிவு நடிகர் அல்பசீனோதான் காரணம் என சொல்லப்படுகிறது.

இறைவிப் படம்  முடிந்து சில சர்ச்சைகள் வேகமாகப் பரவி இயக்குனர் கார்த்திக் சுப்பராஜுக்கு ரெட் கார்ட் போடப்பட இருப்பதாக தகவல்கள் உலாவந்து கொண்டிருந்தது. அப்போது கார்த்திக் சுப்பராஜை அழைத்து தனது அடுத்தப் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பைக் கொடுத்தார் தனுஷ். அதன் பின்னர் தனுஷ் நடித்துக்கொண்டிருந்த வரிசையானப் படங்களால் அந்தப் படம் சாத்தியமாகாமல் போனது. அதன் பின்னர் கார்த்திக் சுப்பராஜும் மெர்குரி மற்றும் பேட்ட ஆகியப் படங்களை இயக்கி முடித்துவிட்டார்.

இந்நிலையில் பேட்ட படத்தை அடுத்து கார்த்திக் சுப்பராஜின் அடுத்தப் படமாக தனுஷ் படம் அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. கார்த்திக் சுப்பராஜும் இப்போது கதை எழுதும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்தக் கூட்டணியில் உருவாகும் படங்கள் நீண்ட காலமாக தாமதம் ஆவதற்கு மேலும் ஒருக் காரணமும் கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் முக்கியமான ஒருக் கதாபாத்திரத்தில் நடிக்க ஹாலிவுட் நடிகர் அல்பசீனோவை நடிக்க வைக்க இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் முடிவு செய்துள்ளாராம். ஆனால் கதை சொல்ல அவரை நெருங்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அல்பசீனோவிடம் கதை சொல்ல தீவிர முயற்சி எடுத்து வருவதாகவும் அது தாமதம் ஆவதாலேயே படம் தாமதம் ஆவதாகவும் கூறப்படுகிறது.

78 வயதாகும் அல்பசினோ இப்போது டி காப்ரியோ மற்றும் பிராட் பிட் நடிப்பில் டாரண்டினோ இயக்கும் ஒன்ஸ் அப் ஆன் எ டைம் இன் ஹாலிவுட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.