புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 2 மார்ச் 2019 (09:39 IST)

அபிநந்தன் பெயரை குழந்தைக்கு சூட்டிய லதா ரஜினிகாந்த்!

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியும் தனது தைரியதால் பாகிஸ்தான் ராணுவத்தினர்களின் கேள்விக்கு பதில் சொல்லாமல் இந்தியாவின் பெருமையை உலகிற்கு பறை சாற்றிய விங் கமாண்டர் அபிநந்தன் நேற்று விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து இந்தியாவே நேற்று திருவிழாக்கோலம் பூண்டது. சமூக வலைத்தளங்களில் பல ஹேஷ்டேக்குகளில் டிரண்ட் ஆனது. அபிநந்தன் குறித்து பேசாத இந்தியர்களே இல்லை என்ற நிலையில் ஒரே நாளில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஹீரோவாகவும் அபிநந்தன் மாறினார்.
 
இந்த நிலையில் நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'பேட்ட' திரைப்படத்தின் 50வது நாள் வெற்றிவிழா கொண்டாடப்பட்டது. இதில் ரஜினிகாந்த், கலாநிதி மாறன், லதா ரஜினிகாந்த், தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர் 
 
இந்த விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த சில பார்வையாளர்கள் தங்களது குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு லதா ரஜினியிடம் கேட்டுக்கொண்டனர். அவர் ஒரு குழந்தைக்கு அபிநந்தன் என்றும் மற்ற இரு குழந்தைகளுக்கும் சமீபத்தில் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சுப்ரமணியன், சிவசந்திரன்  என்றும் பெயர் வைத்தார்.