நடிகர் அஜித் ரேஸ் கார் ஓட்டியபோது விபத்துக்குள்ளான நிலையில் 24 மணி நேரத்திற்குள் மீண்டும் அடுத்த கட்ட ரேஸில் வந்து இணைந்துள்ள சம்பவம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் அஜித்குமார் சமீப காலமாக படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் கார் ரேஸிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக தனி நிறுவனத்தை தொடங்கியுள்ள அஜித்குமார் மற்றும் அவரது குழுவினர் துபாயில் நடைபெறும் கார் ரேஸில் கலந்து கொண்டுள்ளனர்.
நேற்று இதற்கான பயிற்சி ஓட்டம் நடந்தபோது அதில் அஜித்குமார் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது. ஆனால் நல்வாய்ப்பாக அவர் காயங்களின்றி தப்பினார். இது அஜித் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அஜித் குணமாக பல நாட்கள் ஆகும் என நினைத்த நிலையில் விபத்து நடந்து 24 மணி நேரம் கூட ஆகியிராத நிலையில் அடுத்த சுற்றில் கலந்து கொண்டுள்ளாராம் அஜித்குமார்.
இன்று இரண்டாம் கட்டமாக நடந்த தகுதி சுற்றில் கலந்து கொண்டு கார் ஓட்டிய அஜித்குமார் நாளை நடக்கும் கார் அணிவகுப்பிலும் கலந்து கொள்ள உள்ளார் என அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜித்குமாரின் இந்த விடாமுயற்சி ரசிகர்களை ஆச்சர்யம் கொள்ள செய்துள்ளது.
Edit by Prasanth.K