வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 8 அக்டோபர் 2024 (11:30 IST)

பைக் ரைடில் சாதனைக்கு மேல் சாதனை செய்யும் அஜித்! - அந்தமானில் செய்த சாதனை சம்பவம்!

Ajithkumar

நடிகர் அஜித்குமாரின் வீனஸ் டூர்ஸ் நிறுவனம் அந்தமானில் நடத்திய மோட்டார் சைக்கில் ரைட் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

 

 

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ள நிலையில், சமீபமாக பொறுமையாகவே படங்கள் நடித்து வருகிறார். அதேசமயம் அடிக்கடி உலகளாவிய பைக் பயணங்களையும் மேற்கொண்டு வருகிறார்.

 

சமீபத்தில் நடிகர் அஜித், வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் சார்பில் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஹார்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிள் ரைட் சமீபத்தில் நடத்தப்பட்டது. ஐலேண்ட் ரம்பிள் என்றழைக்கப்படும் இந்த ரைட் நிகழ்ச்சியை செய்ததின் மூலம் அஜித் குமாரின் நிறுவனம் உலக சாதனை புத்தகத்தில் (World Book of Records) இடம்பெறுவதற்கான பரிந்துரைக்கு தகுதி பெற்றுள்ளது.

 

ஒருபக்கம் சினிமா, மறுபக்கம் ரேஸிங் என அஜித்குமார் பயணித்து வரும் நிலையில் சினிமாவை போலவே ரேஸிங்கிலும் சாதனைகளை அவர் படைத்து வருவது அவர் ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

 

Edit by Prasanth.K