1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 27 ஜூன் 2022 (17:44 IST)

அஜித், விஜய்யை வைத்து படம் இயக்கத் தயார் !- பார்த்திபன்

பார்த்திபன் நடித்து இயக்கிய  'இரவின் நிழல்’ திரைப்படம் இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில்  பார்த்திபனுடன் நடிகை, வரலட்சுமி சரத்குமார் உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் உலகிலேயே முதன்முதலில் உருவாக்கப்பட்ட ஒரே ஷாட்டில் உருவாக்கப்பட்ட நான்லீனியர் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது  இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே பல்வேறு விருதுகளுக்கு சென்று உள்ள இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ajithkumar

இந்த நிலையில்,  பார்த்திபன் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ஒத்த செருப்பு படம் பெரும் வெற்றி பெற்று. தேசிய விருது பெற்றது. தற்போது இந்தியில், அமிதாப் நடிப்பில்,  அவர் ரீமேக் செய்து வருகிறார்.

இந்த நிலையில், தமிழில் அஜித், விஜய்யை வைத்து ஏன் படம் இயக்கவில்லை எனக் கேட்கிறார்கள். அதற்கு, அவர்,  விஜய், அஜித் என  இருவருக்கும் தலா 5 கதைகள் வைத்திருக்கிறேன். ஆனால், அவர்கள் என் இயக்கத்தில் நடிக்கவேண்டும். அப்படி சம்மதித்தால் , அதில் அவர்களுக்குப் பிடித்தமான கதையில் அவர்கள் நடிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.