விஜய்யுடன் நடிக்க ஆசைப்படுகிறேன்- பிரபல நடிகை ஓபன் டாக்!
ராம் பொத்தினேனி நடிப்பில் லிங்குசாமி இயக்கும் புதிய படத்துக்கு ''தி வாரியர்'' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு சண்டக்கோழி 2 என்ற படத்தை இயக்கிய லிங்குசாமி அதன்பின் நான்கு ஆண்டுகள் கழித்து இயக்கி வரும் திரைப்படம் தி வாரியர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படம் ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற புல்லட் என்ற பாடலை நடிகர் சிம்பு தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடியுள்ளார். இந்தப் புல்லட் பாடல் சமீபத்தில் ரிலீஸாகி வைரல் ஹிட்டானது. அதிகளவில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள் ரசிகர்களால் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டன. இந்நிலையில் தற்போது அந்த படத்தில் இடம்பெறும் மற்றொரு பாடலான விசில் பாடலும் வெளியாகி வல்ல வ்ரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், தி வாரியர் பட நடிகை கீர்த்தி ஷெட்டியிடம் தென்னிந்திய சினிமாவில் பிடித்த நடிகர் யார் என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குஇ அவர், தென்னிந்திய சினிமாவில் பல நடிகர்களை எனக்குப் பிடிக்கும், தமிழ் சினிமாவில் விஜய்யை மிகவும் பிடிக்கும். அவருடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன். இதற்கான வாய்ப்பு விரைவில் அமையும் எனத் தெரிவித்துள்ளார். இதனால், விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.