‘ரத்தம்’ படத்துக்காக விஜய் ஆண்டனியோடு இணைந்த பிரபல ராப் பாடகர்!
இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கும் ரத்தம் படத்தில் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார்.
விஜய் ஆண்டனி நடிப்பில் CS.அமுதன் இயக்கும் 'ரத்தம்' படம் சில மாதங்களுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டது. வேகவேகமாக நடந்து வரும் இந்த படத்தின் படபிடிப்பு பணிகளில், தற்போது படக்குழு இந்திய படபிடிப்பை நிறைவு செய்துள்ளது. இந்திய படப்பிடிப்பு நிறைந்த நிலையில் படக்குழு உற்சாகத்தில் உள்ளது. மேலும் வெளிநாட்டு படபிடிப்பை படக்குழு வெகு விரைவில் துவங்கவுள்ளது. சி எஸ் அமுதன் இயக்கும் இந்த திரைப்படம் அவரின் முந்தைய திரைப்படங்களை போல நகைச்சுவை அம்சம் கொண்டதாக இல்லாமல், சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் வகையில் உருவாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் ப்ரமோஷன் பாடல் ஒன்றை பிரபல ராப் பாடகர் தெருக்குரல் அறிவு பாடியுள்ளார். இந்த பாடலின் ஷூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது. இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த பாடலுக்கு நடன இயக்குனர் கல்யாண் நடனம் அமைத்துள்ளார்.