திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 7 செப்டம்பர் 2023 (06:49 IST)

அடுத்த கட்டத்துக்கு சென்ற விடாமுயற்சி… அஜித் ரசிகர்களுக்கு குட் நியூஸ்!

அஜித் தன்னுடைய 62ஆவது படமான விடாமுயற்சி படத்தில் இப்போது கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.  இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் இன்னும் அடுத்த கட்ட பணிகள் நடக்கவில்லை. ஷூட்டிங் எப்போது என்பதும் தெரியவில்லை.

இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் மற்றும் லொகேஷன் தேடுதல் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்போது இயக்குனர் மகிழ் திருமேனி உள்ளிட்ட படக்குழுவினர் லொகேஷன் தேடுதலுக்காக துபாய்க்கு தற்போது சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் விரைவில் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது.