1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Lyca subashkaran talked about vidamuyarchi movie

விடாமுயற்சி ஷூட்டிங் எப்போது? சந்திரமுகி 2 நிகழ்வில் பேசிய லைகா சுபாஷ்கரன்!

அஜித் 62
அஜித் தன்னுடைய 62ஆவது படமான விடாமுயற்சி படத்தில் இப்போது கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.  இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் இன்னும் அடுத்த கட்ட பணிகள் நடக்கவில்லை. ஷூட்டிங் எப்போது என்பதும் தெரியவில்லை.

ஷூட்டிங் தொடங்கும் நாளுக்காக காத்திருந்து காத்திருந்து அஜித் ரசிகர்கள் அப்செட் ஆகி வலிமை அப்டேட் போல விடாமுயற்சி அப்டேட்டை செல்லும் இடமெல்லாம் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்நிலையில் கடந்த சில தினங்களாக இந்த படம் கைவிடப்பட உள்ளதாக தகவல்கள் தீப்போல பரவின. ஆனால் அது உண்மையில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட லைகா சுபாஷ்கரன் விடாமுயற்சி பற்றி பேசியுள்ளார். அதில் “விடாமுயற்சி ஷூட்டிங் விரைவில் தொடங்கும். அது எங்களுடைய பெருமைமிகு படைப்புகளில் ஒன்றாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
ஓப்பன்ஹெய்மரை விட ராக்கெட்ரிதான் எனக்கு பிடித்திருந்தது… ஏ ஆர் ரஹ்மான் பாராட்டு!