ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 24 டிசம்பர் 2018 (14:41 IST)

விஸ்வாசம்' படத்திற்கு கிடைத்த 'சென்சார்' சான்றிதழ்

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தின் சென்சார் பணி இன்று நடைபெறும் என ஏற்கனவே கடந்த வாரமே கூறப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தை சென்சார் அதிகாரிகள் பார்த்து படத்திற்கு எந்தவித 'கட்'டும் இல்லாமல் 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர். இதனையடுத்து இன்று அல்லது நாளை இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது

விஸ்வாசம்' படத்தின் சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டதையே அஜித் ரசிகர்கள் ஒரு கொண்டாட்டமாக கொண்டாடி வருகிறது. டுவிட்டரில் விஸ்வாசம் சென்சார் குறித்த ஹேஷ்டேக் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது.

பொங்கல் தினத்தில் வெளியாகும் ரஜினியின் 'பேட்ட' திரைப்படம் சென்சாரில் 'யூஏ' சான்றிதழ் பெற்றுள்ள நிலையில் அஜித் படம் 'யூ' சான்றிதழ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அனேகமாக இரண்டு படங்களும் ஜனவரி 10ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது