50வது பிறந்தநாளுக்கு 50kg கேக் வெட்டிய அஜித் ரசிகர்கள்!
நடிகர் அஜித் இன்று தனது 50 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் . அவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் எல்லோரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது அஜித்தின் ரசிகர்கள் அவரது வயது எண்ணிக்கையில் 50 கிலோவில் பிரமாண்டமான கேக் தயார் செய்து வெட்டியுள்ளனர். மேலும், சில ரசிகர்கள் ஆதரவற்றோருக்கு கறி சோறு விருந்து கொடுத்து பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர்.