வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (22:15 IST)

அஜித் பிறந்தநாளை கொண்டாட தொடங்கிய ரசிகர்கள்

நடிகர் அஜித்குமார் நாளை தனது 50 வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். இந்நிலையில் ரசிகர்கள் அவரது பிறந்தநாள் டிபி வெளியிட்டு டுவிட்டரில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

பைக் மெக்கானிக் பணி செய்து, தமிழ் சினிமாவில் ஒரு துணை நடிகராகவும்,  விளம்பரங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த அஜித்குமார், கிடைத்த வருமானத்தைக் கொண்டு கர் ரேஸில் ஈடுபடுவதில் விரும்பம் கொண்டிருந்தார்.

பின்னர், அமராவதி, ஆசை, காதல்கோட்டை காதல்மன்னன், போன்ற படங்க வெற்றி பெறவே சினிமாவின் முன்னணி நடிகரானார்.

இருப்பினும் கார் ரேஸ், பைக்ரேஸ், துப்பாக்கிசுடுதல், ட்ரோம் போன்ற நிகவில் ஆர்வம் கொண்டு பன்முகக் கலைஞராக ஜொலிக்கிறார்.

இவரது வலிமை படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில், மே 1 அன்று அவரது பிறந்தநாளின்போது ரிலீஸ் செய்யப்பட இருந்த வலிமை பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் கொரோனாஇரண்டாம் அலை பரவலால் ஒத்திவைக்கப்பட்டது.

இருப்பினும் அஜித் ரசிகர்கள் அஜித்தின் செயலுக்கு  கீழ்படிந்து, ஒவ்வொரு செயலையும் ரசித்து அவரைத் தலையின் தூக்கி வைத்து தல என்று கொண்டாடி வருகின்றனர் எனபதற்கு அவரது ரசிகர்களே சாட்சி.