செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 1 மே 2021 (16:31 IST)

அஜித் சொன்ன அறிவுரை... நெகிழ்ந்து வாழ்த்து கூறிய சிவகார்த்திகேயன்!

நடிகர் அஜித் இன்று தனது 50 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் . அவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் எல்லோரும் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் அஜித்துடன் ‘ஏகன்’ படத்தில் நடித்த காட்சியின் புகைப்படத்தை பதிவிட்டு.. 
 
"நீங்கள் வாழ்வில் பல சோதனைகளை கடந்து சாதனைகள் படைத்தது போல் இந்த இக்கட்டான சூழ்நிலையையும் நாங்கள் கடப்போம் என்ற நம்பிக்கையுடன் உங்களுக்கு  இனிய பொன் விழா ஆண்டு நல்வாழ்த்துகள் " என வாழ்த்தியுள்ளார். 
 
அந்த படத்தில் நடித்தபோது பதட்டமாக இருந்த என்னை பார்த்து அவராகவே என்னிடம் வந்து பேசினார். வீட்டில் எல்லாரும் நல்லா இருக்காங்களா? என்ன பண்றாங்க என்றெல்லாம் விசாரித்த அவர் பணத்தை சேர்ர்த்து வையுங்கள், அது மிக முக்கியம், அதிகமாக சேர்த்தால் மற்றவர்களுக்கு உதவி செய்யுங்க என்று கூறினார்.என்று சிவகார்த்திகேயன் பேட்டி ஒன்றில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.