என் ஃபேவரைட் தல... அஜித்துக்கு வாழ்த்து கூறிய ராய் லட்சுமி!
நடிகர் அஜித் இன்று தனது 50 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் . அவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் எல்லோரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
சினிமா பின்புலம் இல்லாமல் வந்து திரைத்துறையில் இன்று நட்சத்திர நடிகராய் ஜொலித்துக்கொண்டிருக்கும் அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது ராய் லட்சுமி தனது இன்ஸ்டாகிராமில் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு என் ஃபேவரைட் தல அஜித் என கூறி பதிவிட்டுள்ளார். அஜித்தின் மங்காத்தா படத்தில் ராய் லட்சுமி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.