திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 7 பிப்ரவரி 2018 (22:17 IST)

அஜித்தின் விசுவாசத்தில் இணைந்த மேலும் ஒரு பிரபலம்

இயக்குநர் சிவா-அஜித் கூட்டணியில் விவேகம் படத்தை அடுத்து விசுவாசம் படத்தில் மீண்டும் நான்காவது முறையாக இணைந்துள்ளனர். இந்த படத்தை ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இந்நிலையில் அஜித்துக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு, ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார். அஜித், இந்த படத்தில் மிக ஸ்டைலிஷாகவும், செம ஸ்லிம்மாகவும் தோன்றவுள்ளாராம். சமீபத்தில்,  படத்திற்கு பூஜை போடப்பட்டது.
 
சமீபத்தில் டி இமான் டிக் டிக் டிக் படத்திற்கு 100-வது படமாக இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, விசுவாசம் படத்திற்கு இமான் இசையமைப்பதாக தகவல் வெளிவந்திருக்கிறது. இது பற்றி முறையான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம். 
 
இந்நிலையில் இந்த கூட்டணியில் டி.இமான் இணைவது உறுதியானால், அஜித்துடன் கைகோர்க்கும் முதல் படம் ‘விசுவாசம்’ஆக இருக்கும். ‘தல 58’யின்  ஷூட்டிங்கை வருகிற பிப்ரவரி 22-ஆம் தேதி துவங்கவுள்ளனர். படத்தை இந்தாண்டு தீபாவளி ஸ்பெஷலாக வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.