செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 3 பிப்ரவரி 2018 (00:28 IST)

சிவசேனாவை அடுத்து பாஜக கூட்டணியில் இருந்து விலகும் தெலுங்கு தேசம்

பாஜகவின் நெருங்கிய தோழமை கட்சியாக இருந்த சிவசேனா, சமீபத்தில் பாஜக கூட்டணியில் இருந்து விலகியதை அடுத்து தற்போது தென்னிந்தியாவில் உள்ள ஒரே கூட்டணி கட்சியான தெலுங்கு தேசத்தையும் பாஜக இழக்கவுள்ளதாக தெரிகிறது.

கடந்த 1ஆம் தேதி தாக்கல் செய்த பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்தின் முக்கிய கோரிக்கையான தலைநகர் அமராவதிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குதல், போலவரம் அணைக்கட்டு, விசாகப்பட்டினம், விஜயவாடா ஆகிய நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் போன்றவை இல்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, வரும் ஞாயிறு அன்று தெலுங்கு தேச எம்பிக்கள் கூட்டத்தை கூட்டியுள்ளதாகவும், இந்த கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணியை தொடர்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ராஜஸ்தான், மேற்குவங்கத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக தோல்வி அடைந்த நிலையில் தற்போது ஒரு முக்கிய கூட்டணி கட்சியை பாஜக இழப்பது அக்கட்சிக்கு பின்னடவையே என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.