அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் ஹீரோயின் நயன்தாரா : அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் ஹீரோயினாக நயன்தாரா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக நடிக்கும் படம் ‘விஸ்வாசம்’. தீபாவளிக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. அவ்வளவு ஏன்... தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் இந்த நான்கு பேரைத் தவிர படம் சம்பந்தப்பட்ட ஒருத்தர் பெயர் கூட அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், ‘விஸ்வாசம்’ படத்தின் ஹீரோயின் நயன்தாரா என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படத்தைத் தயாரிக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம். இருவரும் கடைசியாக ‘ஆரம்பம்’ படத்தில் ஒன்றாக நடித்தனர். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.