புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : திங்கள், 6 ஜனவரி 2020 (11:19 IST)

ஆப்ரேஷன் பண்ணிடீங்களா...? அடையாளமின்றி மாறிப்போன ஐஸ்வர்யா தத்தா!

கடந்த 2015ம் ஆண்டு நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.  பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டவர் நடிகை  ஓவியா அதேபோல் இரண்டாவது சீசனில்  சில மோசமான காரியங்களால் ரசிகர்களிடம் அதிகம் திட்டுவாங்கி பிரபலமடைந்தவர் ஐஸ்வர்யா. 
 
பிக்பாஸ் சீசன் 2ல் இரண்டாம் இடத்தை பிடித்த ஐஸ்வர்யா கடைசியில் ரசிகர்கள் மனதில் முதலிடத்தை பிடித்தார். இந்நிகழ்ச்சிக்கு பிறகு மஹத்துடன்  ‘கெட்டவனு பேரெடுத்த நல்லவன்டா என்ற புது படத்திலும் நடிகர் ஆரியுடன் அலேக்கா என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இப்படி பல படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் எதையாவது பதிவேற்றம் செய்து ஆக்டீவாக இருந்து வருகிறார். 
 
அந்த வகையில், தற்போது ஊதா நிறத்தில் கவர்ச்சி உடையணிந்து ஓவர் மேக்கப் போட்டு ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார். அந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகியுள்ளார்.