புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : சனி, 4 ஜனவரி 2020 (18:24 IST)

மியூசிகல், ஆக்ஷன் , த்ரில்லர்... மீண்டும் வெயிட்டாக களமிறங்கும் பதம் குமார்- தீபன் பூபதி!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சிம்பு, வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் போடா போடி. இந்த படத்தை தயாரித்திருந்த தயாரிப்பாளர்களில் ஒருவர் பதம் குமார். இவர் ஏற்கனவே ஹிந்தியில் பல படங்களை இயக்கி தற்போது மீண்டும் பட தயாரிப்பிலும் இயக்கத்திலும் இறங்க உள்ளார். 
 
பதம் குமார்  இயக்கவுள்ள இப்படம் திருமணமான ஒரு நபரின் வாழ்க்கையில் முன்னாள் காதலியும் இன்னொரு பெண்ணும் நுழைய அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதை ம்யூசிக்கல் திரில்லராக உருவாகியுள்ளது.  வேல் ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை தீபன் பூபதி பதம் குமாருடன் இணைந்து தயாரிக்கிறார். 
 
அதையடுத்து மூன்றாவது படமாக ஒரு நாயகன் மற்றும் இரண்டு நாயகிகளை கொண்ட ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.  கனடாவில் இருந்து இந்தியாவிற்கு  நடிக்க வரும் பெண்ணின் கதை தான் இப்படம். இந்த படங்களின் படபிடிப்பு இந்தியா, கனடா மற்றும் தாய்லாந்து நாடுகளில் நடக்க உள்ளது. இந்த மூன்று படங்களுக்கும் கனடாவின் தலைநகரமான ஒட்டாவா ( Ottowa ) அரசின் மேயர் இப்படங்களை ப்ரொமோட் செய்ய உள்ளார். 
 
இன்னும் ஓரிரு வாரங்களில் படக்குழு மற்றும் டெக்னீஷியன் டீம் லொகேஷன்களை தேர்வு செய்ய கனடா செல்ல உள்ளனர். மே மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.