புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 30 அக்டோபர் 2022 (13:11 IST)

நடிகை அதிதியின் ஆசை காதலர் இவரா? இன்ஸ்டாகிராமில் வெளியான போட்டோ!

பிரபல இந்தி நடிகை அதிதி ராவ் தமிழ் நடிகர் ஒருவரை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தி சினிமாவில் அறிமுகமாகி பல்வேறு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருபவர் அதிதி ராவ். தமிழில் காற்று வெளியிடை, ஹே சினாமிகா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவருக்கு அனைத்து மொழிகளிலும் ரசிகர்கள் உள்ளனர்.

சமீப காலமாக அதிதி ராவ் ஹைதாரியும், பிரபல தமிழ் நடிகர் சித்தார்த்தும் காதலித்து வருவதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது சித்தார்த் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படம் வைரலாகியுள்ளது.

Aditi


அதிதியின் பிறந்தநாளில் அவருடன் இருக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள சித்தார்த் அதில் “என் இதய இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே காதல் இருப்பது உறுதிப்பட்டுள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

Edited By Prasanth.K