நடிகைகளுக்கு சம்பளம் குறைவு....விஜய், சூர்யா பட நடிகை வருத்தம்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை சமந்தா. இவர் விஜய், சூர்யா போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார்.சினிமாவில் அறிமுகமாக 12 ஆண்டுகள் ஆகிறது. இவர் தற்போது சம்பளம் ஹீரோயின்களுக்குக் குறைவாகக் கொடுக்கப்படுவதாகக் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கருத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்:
இன்றையக் காலத்தில் ஹீரோக்களுடன் ஒப்பிடும்போது, ஹீரோயின்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளம் குறைவாகவே உள்ளது.
மூன்று ஹீரோயின்களில் ஒருவர் முன்னணி நடிகையாக இருந்தாலும் முதல் பட்டியலில் இல்லாத நடிகர்கள் வாங்கும் சம்பளத்தைவிட குறைவாகவே உள்ளது.
இதைச் சுட்டிக்காட்டி நடிகைகள் எதாவது கேட்டால் அதைப் பெரிய பிரச்சனையாக்கி விடுகிறார்கள்.
ஆனால் நடிகர்கள் சம்பளத்தை எத்தனை கோடிகள் உயர்த்தினாலும் அதை சத்தமின்றிக் கொடுக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.