திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 1 மார்ச் 2021 (20:47 IST)

தேவதை தேவதைன்னு சொல்லுவாங்க... ஆனால், இப்போதான் நேர்ல பார்க்குறேன்!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.
 
சமந்தா நடிப்பதோடு மட்டும் நிறுத்திவிடாமல் வீட்டில் இருந்தபடியே விவசாயம் செய்வது,  ஒர்க் அவுட் செய்வது , யோகா செய்வது என பல விஷயங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்கிறார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். 
 
இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் என்னேரமும் ஆக்ட்டிவாக இருந்து வரும் அவர் தற்போது மலர்ந்த பூ போன்று அழகிய கௌன் உடையில் எடுத்துக்கொண்ட ப்ளாக் அண்ட் ஒயிட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் ரசனைக்கு ஆளாகியுள்ளார்.