விஜய் தேவரகொண்டாவை தூக்கிலிட்டிருந்தால் அதை தடுத்திருக்கலாம்! வரலட்சுமி ஆவேசம்!

Last Updated: புதன், 10 ஏப்ரல் 2019 (15:24 IST)
தமிழ் சினிமாவில் மிகவும் தைரியமான,  துணிச்சலான,  யாருக்கும் அஞ்சாமல் எதையும் நேருக்கு நேர் எதிர்கொள்ளும் நடிகையாக விளங்குபவர் நடிகை வரலட்சுமி. இவர் சினிமாவை தாண்டி சமூக அக்கறையுள்ள சில காரியங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வார். மேலும் பெண்களின் பாதுகாப்பிற்காக முதல் ஆளாக நின்று குரல் கொடுக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். 

சமூக சேவைகளில் மிகுந்த ஆர்வமுள்ள நடிகை வரலட்சுமி பெண்களுக்கு எதிரான பாலியல்தொல்லைகளைத் தடுக்கும் நோக்கத்தில்  'சேவ் சக்தி' என்ற அமைப்பை நடத்தி நடிப்பைத் தவிர சமூக அக்கறையுடன் மற்ற செயல்பாடுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
 
அந்தவகையில் தற்போது, சொல்லவரும் தகவல் என்னவென்றால்,  சமீபத்தில் நடிகை வரலட்சுமி தனது சமூக வலைத்தள பக்கத்தில் "வடிவேல் தேவேந்திரா" என்பவரை தூக்கில் போட வேண்டும் என்று ஆவேசத்தோடு வலியுறுத்தியுள்ளார். 
 
காரணம், கடந்த  2013ஆம் ஆண்டு  மும்பையை சேர்ந்த "விஜய் தேவரகொண்டா" என்ற 35 வயது நபர், ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததற்காக தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் ஐந்து வருடங்களில் நன்னடத்தை காரணமாக சிறையில் இருந்து விடுதலையானார்.
 
இந்நிலையில் தற்போது மீண்டும் ஒன்பது வயது சிறுமிக்கு அதேபோன்று கொடுமை அரங்கேறியுள்ளது. ஒன்பது வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலையும் செய்து அந்த சிறுமியின் பிணத்தை செப்டிக் டேங்கில் போட்டுள்ளார். சிசிடிவி காட்சிகள் மூலம் இதனை உறுதிசெய்த போலீசார் மீண்டும் அவரை கைது செய்துள்ளனர். 
 
இதனை அறிந்து கொதித்தெழுந்த வரலட்சுமி, ஐந்து வயது சிறுமியை கொலை செய்தபோதே அவருக்கு தூக்கு தண்டனை வழங்கியிருந்தால் இப்போது  9 வயது சிறுமி காப்பாற்றப்பட்டிருப்பார். இதுபோன்ற காட்டுமிராண்டிகளை உலகில் நடமாடவிடாமல் இனிமேலாவது குற்றவாளிகளை தாமதிக்காமல் தூக்கில் போடுங்கள் என வரலட்சுமி மிகுந்த ஆவேசத்தோடு தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :