வரலட்சுமியின் அடுத்த படத்தின் சென்சார் தகவல்

Last Updated: செவ்வாய், 19 மார்ச் 2019 (20:47 IST)
கடந்த ஆண்டு 'சர்கார்', 'சண்டக்கோழி 2' மற்றும் 'மாரி 2' ஆகிய படங்கள் உள்பட ஒருசில ஹிட் படங்களில் நடித்த நடிகை வரலட்சுமி இந்த ஆண்டும் தனது கணக்கை 'கன்னிராசி' மூலம் தொடக்கவுள்ளார்.

விமலுடன் வரலட்சுமி நடித்த 'கன்னிராசி' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இன்று இந்த படம் சென்சாருக்கு சென்றது. சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர்,

சென்சார் சான்றிதழ் பெற்றதை அடுத்து விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அனேகமாக இந்த படம் ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதம் வெளியாகும் என தெரிகிறது.
விமல், வரலட்சுமி, பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோ சங்கர், ஷகிலா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை முத்துகுமரன் இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசையில் செல்வகுமார் ஒளிப்பதிவில் ராஜா முகமது படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளதுஇதில் மேலும் படிக்கவும் :