வரலட்சுமி சரத்குமார் கையில் ‘புது டாட்டூ ’ ரகசியம் என்ன ?

varalackmi
Last Updated: சனி, 30 மார்ச் 2019 (11:31 IST)
நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமாரின் மகள் வரலட்சுமி. இவர் பிரபலமான நடிகை உள்ளார்.
அவ்வப்போது சமூகவலைதளங்களிலும் தனது கருத்துக்களை நடிகை வரலட்சுமி பதிவிடுவார். இந்நிலையில் தன் கையில் சினிமாவைக் காதலிப்பதாக கூறும் விதத்தில் அவர் தனது கையில் டாட்டூ போட்டுள்ளார்.
 
சமீபத்தில் வெளியான அத்தனை படத்திலும் வரலட்சுமி தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதற்க்காக பலராலும் பாராட்டப்பட்டார். தற்போது அவர் கன்னிராசி, டேனி, ,நீயா 2, வெல்வெட் நகரம் ஆகிய படத்தில் நடித்து வருகிறார். 
 
தற்போது அவர் தன் கையில் வரைந்துள்ள டாட்டூ பற்று சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது ;

'போராடி வாழ்கிற எல்லா பெண்களும் ஆதரவாகவும் அதேசமயம் சினிமாவின் மீதான் எனது காதலுக்குமாகத் தான் இந்த டாட்டூ. நமது வாழ்க்கை மற்றவர்களுக்காக பொய்கள் நிறைந்துள்ளது. நாம் முகமூடி அணிந்துள்ளோம். அதனால் இந்த முகமூடி இல்லாத அமைதியான வாழ்கையை நம்பிக்கையுடன் வாழுவோம் என்று தெரிவித்துள்ளார்.'
varalackmiஇதில் மேலும் படிக்கவும் :