மறைந்த இயக்குநர் மகேந்திரனுக்கு வரலட்சுமி சரத்குமார் புகழாஞ்சலி

varalakshmi
Last Updated: செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (19:30 IST)
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் பிரபல நடிகருமான சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி  எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பவர். டுவிட்டரில் பெரும்திரளான ரசிகர்கள் இவரை பின் தொடர்கிறார்கள்.
பிரபல இயக்குநர் மகேந்திரன் உடல்நிலை சரியில்லாத நிலையில் இன்று உயிரிழந்தார்.அவரது மறைவுக்கு நடிகர்கள், நடிகையர், இயக்குநர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் வரலட்சுமி சரத்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் மறைந்த இயக்குநர் மகேந்திரனுக்கு புகழாஞ்சலி செலுத்தி உள்ளார். 
 
அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது: என் இறுதி மரியாதையை உங்களுக்கு அளிக்கிறேன் மகேந்திரன் சார். நீங்கள் பார்க்க  அமைதியானவர். நீங்கள் என்றும் மறக்கப்படுவதில்லை. மேதைகள் ஒருபோதும் மறக்கப்படுவதில்லை. என்று வரலட்சுமி சரத்குமார் தன் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
varalakshmiஇதில் மேலும் படிக்கவும் :