1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (12:36 IST)

கல்யாணம் செஞ்சாதான் குழந்தை பிறக்குமா? – அதிரடியாக பதில் சொன்ன நடிகை தபு!

பிரபலமான சினிமா நடிகை தபு திருமணம் குறித்து பேசியபோது குழந்தை பிறக்க திருமணம் அவசியமில்லை என பேசியுள்ளார்.

இந்தி சினிமாவில் பிரபலமான நடிகையாக உள்ளவர் தபு. இந்தியில் மட்டுமல்லாது பிற இந்திய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சிறைச்சாலை என பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

தற்போது 50 வயதான தபு இதுவரை திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து வருகிறார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய நடிகை தபு “எனக்கு எல்லாரையும் போல தாயாக வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் அதற்காக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை” என்று பேசியுள்ளார்.


மேலும் “திருமணம் ஆகாவிட்டால் கூட கர்ப்பம் ஆகலாம். வாடகை தாய் மூலமாக குழந்தை பெறலாம். நான் தாயாக விரும்பினால் இதில் ஒன்றை தேர்ந்தெடுப்பேன். திருமணம் ஆகாவிட்டால் செத்துப் போக மாட்டோம். திருமணம் அவசியமான ஒன்று அல்ல. தற்போது எனது திரை வாழ்க்கையில் கிடைக்கும் மகிழ்ச்சியை அனுபவித்து வருகிறேன். திருமணம், குழந்தை பெறுதல், காதல் இவை யாவற்றிற்கும் வயதிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று பேசியுள்ளார்.