வெள்ளி, 31 மார்ச் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified திங்கள், 5 செப்டம்பர் 2022 (18:28 IST)

வீராவுக்கு கிடைத்த பாராட்டுகளுக்கு காரணம் அவர்தான்- விக்ரம்

ravanan
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விக்ரம் தனது டுவிட்டர் பக்கதில் வீராவுக்கு கிடைத்த பாராட்டுக்குக் காரணம் மணிரத்னம் எனப் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் கடந்த 2010 ஆம் ஆண்டு விக்ரம்- ஐஸ்வர்யா ராய்- பிரித்விராஜ், - கார்த்தி, பிரபு ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ராவணன். ராமாயணத்தை நவீன காலத்திற்கு ஏற்ப இயக்குனர் மணிரத்னம் திரைப்படமாக எடுத்திருந்தார்.

இப்படம் அக்காலத்தில்  ரூ.25 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தில் விக்ரம் ராவணனாகவும், பிரித்விராஜ் போலீஸ் அதிகாரி வேடத்தில்  நடித்திருந்தனர்.

இந்த நிலையில், இப்படத்தில் நடித்த விக்ரமுக்கு பெரும் பாராட்டுகள் குவிந்தது. இதுகுறித்து இப்போது, கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில், வீராவுக்கு கிடைத்த இந்த பாராட்டுக்கும், மரியாதைக்கும் பல்லாயிரம் நன்றிகள். என் இயக்குனர் Mani Ratnam sirஅவர்களுக்கும்.  #Ravanan என்று பதிவிட்டுள்ளார்.

விக்ரம் சமீபத்தில்தான் டுவிட்டரில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.