வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (09:13 IST)

ராஷ்மிகா மந்தனா- அமிதாப் பச்சன் நடிக்கும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள குட்பை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய் நடிக்கும் வாரிசு படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இது தவிர அவர் நடிப்பில் புஷ்பா 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ராஷ்மிகா பாலிவுட்டில் அமிதாப் பச்சனோடு இணைந்து நடித்துள்ள படமான குட்பை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் அக்டோபர் 7 ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.