திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 5 செப்டம்பர் 2022 (15:01 IST)

அட்லி ஷாருக் கான் படத்தில் இருந்து ரஹ்மான் நீக்கப்பட்டாரா? பின்னணி என்ன?

அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் ஜவான் படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கி நடந்தது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்துக்காக மும்பையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறார் அட்லி. இதையடுத்து சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு மற்றும் தலைப்பு ‘ஜவான்’ என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. சென்னையில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு காட்சிகளை அட்லி படமாக்கி வருகிறார். சென்னையில் ஷூட்டிங் நடக்கும்போது அதில் ஒருநாள் விஜய் கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தில் முதலில் இசையமைப்பாளராக ஏ ஆர் ரஹ்மான்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது அனிருத்தான் இசையமைப்பாளர் என்பதை அவரே உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் தற்போது வட இந்தியா மற்றும் பாலிவுட்டில் ரஹ்மானுக்கு எதிரான மனநிலை அதிகமாக இருப்பதால்தான் அவரை நீக்கிவிட்டு படக்குழு அனிருத்தை ஒப்பந்தம் செய்ததாக சொல்லப்படுகிறது.