செவ்வாய், 21 மார்ச் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (16:05 IST)

விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள்! வைரல் புகைப்படம்

salman khan
இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி தினம் கொண்டாடப்பட்டது. அன்று, திரைப்பட நட்சத்திரங்களும்  ரசிகர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்துனர். இந்த நிலையில்,  பிரபல இந்தி சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தன் குடும்பத்தினருடன் இணைந்து விநாயகர் சதுர்ச்சி விழா கொண்டாடினார்.

இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தனது ஒவ்வொரு  படத்தையும் தன் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கொடுத்து வசூல் சாதனை படைக்கும் அவர், சமீபத்தில் வெளியான தபாங் -2 படத்தில் ஏமாற்றினார்.

தற்போது புதிய படத்தில் கவனம் செலுத்தி வரும் அவர்,   விநாயகர் சதுர்ச்சி விழாவை தன் தங்கை அர்பிதா வீட்டில் கொண்டாடினார்.  அப்போது, விநாயகர்  சிலை முன் நின்று, சூடம் ஏற்றி, தட்டுடன், ஆரத்தி சுற்றிக் காட்டினார்.

இஸ்லாமியரான அவர் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

அதேபோல் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானும் தன் வீட்டில்  வி நாயகர் சிலையை அலங்காரம் செய்து வி நாயகர் வணங்கினா வி நாயகர் சதுர்த்தியை கொண்டாடினார். இந்தப் புகைப்படமும் வைரலாகி வருகிறது.

 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)