டைட் ஜிம் உடையில் போஸ் கொடுத்த ஸ்ரீதிவ்யா..! நீங்களும் இப்படியா....?
தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சூப்பர் ஹிட் படங்ககளை கொடுத்துவிட்டு பின்னர் வாய்ப்பு கிடைக்காமல் ஆள் அடையாளம் தெரியாமல் போன நடிகைகளின் லிஸ்ட்டை எடுத்து பார்த்தால் நீண்டுகொண்டே போகும். அதிலும் ஒரு சிலர், வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தில் இருந்து வருவார்கள்.
அந்தவகையில் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் ஒரே படத்தில் இடம் பிடித்தவர் நடிகை ஸ்ரீ திவ்யா. அந்த படத்தில் கிராமத்து பெண்ணாக பவ்யமான அழகை வெளிப்படுத்தி நடித்திருந்த அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.
இந்நிலையில் சமீபநாட்களாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருவதோடு அடிக்கடி போட்டோஷூட்களை நடத்தி ரசிகர்களை கவனத்தை ஈர்த்து வருகிறார் நடிகை ஸ்ரீ திவ்யா. அந்தவகையில் தற்போது, கட்டான தோற்றத்தை பெற கடுமையாக மணிக்கணக்கில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை கண்ட நெட்டிசன்ஸ் நீங்களும் இப்படியா என்று ஷாக்காகியுள்ளனர்.