கவின் கூட பேசுறியா..? அவ்வளவு சொல்லியும் திருந்தாத லொஸ்லியா!

Papiksha| Last Modified வியாழன், 12 செப்டம்பர் 2019 (12:00 IST)
லொஸ்லியாவின் அம்மா , அப்பா , தங்ககை என அனைவரும் Freeze டாஸ்க் மூலம் பிக்பாஸ் வீட்டிற்கு நேற்று வந்தனர். அவரது அப்பா லொஸ்லியாவை கடுமையாக திட்டினார். எதற்காக நீ இங்கு வந்தாய்... என்னிடம் என்ன சொல்லிவிட்டு இங்கு வந்த..? இப்போ என்ன செய்துகொண்டிருக்கிறார் என கேள்வி மேல் கேள்வி கேட்டு திட்டினார். 


 
அவரது அம்மாவும் " அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் எவ்வளவு கேலியாக பேசுறாங்க ... நீ எப்படி இருந்த என்னாச்சு உனக்கு ஏன் இப்படி மாறிட்ட..என அழுது கேட்டார். மேலும் கவினிடம் நீ பழகுவதை நிறுத்து உன்னுடைய விளையாட்டை நீ விளையாடு என்று அறிவுறுத்தினர். பின்னர் வீட்டிற்குள் இருந்த சக போட்டியாளர்களிடம் பேசுவதற்காக அவர்கள் உள்ளே வந்த போது லொஸ்லியா அவரது அம்மாவிடம் " நீ கவின் கிட்ட பேசுறாயா என்று கேட்டார்".
 
ஆனால், அவரது அம்மா அதனை கண்டுகொள்ளவே இல்லை,  மேலும் கவினிடன் அவர் பேசவும் இல்லை. இதனை கண்ட நெட்டிசன்ஸ் அவ்வளவு தூரம் சொல்லியும் இது திருந்துதா பாருங்ககள் என கூறி திட்டி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :