வியாழன், 28 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (12:09 IST)

பூமிப்பந்தின் நுரையீரல் பற்றி எரிகிறது - நடிகை சிம்ரன் கவலை!

பூமிக்கு தேவையான சுவாச காற்றில் 20 சதவீதத்தை உற்பத்தி செய்து தந்து வந்தது பிரேசிலில் உள்ள அமேசான் மழைக்காடுகள்தான். எனவேதான் இந்த காடுகள், பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படுகின்றன. இந்த காடுகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் ஏராளமான இடங்களில் தீப்பற்றி எரிகின்றன. இது ஐரோப்பிய நாடுகளை மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களை மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. 


 
அந்தவகையில் தற்போது நடிகை சிம்ரன் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, 'பூமிப்பந்தின் நுரையீரல் என்றழைக்கப்படும் அமேசான் காடுகள் தீப்பற்றி எரிந்துக்கொண்டிருக்கிறது. அதை உடனே அணைக்க வேண்டும்.  
 
மேலும் இது இன்றைய இளைஞர்களுக்கும்,  அவர்களின் எதிர்கால தலைமுறையினருக்கும் மிகுந்த கவலையாக உள்ளது. ஆரோக்கியமாகவும் பொறுப்புடனும் வாழ்வோம்! என கவலையுடன் குறிப்பிட்டிருக்கிறார் சிம்ரன்.