தீபாவளி தினத்தில் மோதும் விஜய்-விஜய்சேதுபதி படங்கள்

Last Modified ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2019 (16:34 IST)
தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளதாக பல மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் காரணமாக மற்ற படங்கள் தீபாவளிக்கு முன் அல்லது தீபாவளிக்கு பின் ரிலீஸ் ஆகும் என்றும் பிகில் திரைப்படம் சோலோவாக ரிலீஸாகி வசூலை குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது
ஆனால் திடீர் திருப்பமாக விஜய்சேதுபதி நடித்த 'சங்கத்தமிழன்' திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் விஜய், விஜய்சேதுபதி படங்கள் மோதுவது உறுதியாகியுள்ளது

மேலும் கார்த்தி நடித்த 'கைதி' மற்றும் தனுஷ் நடித்த 'பட்டாஸ்' ஆகிய திரைப்படங்களும் தீபாவளி அன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுவதால் இந்த தீபாவளி நான்குமுனை போட்டி தீபாவளியாகவும் மாற வாய்ப்பு உள்ளது

bigil
விஜய்யின் 'பிகில்' திரைப்படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதால் சோலோவாக ரிலீஸ் ஆனால் மட்டுமே அதிக வசூலை பெற்று லாபத்தை பெற முடியும் என்ற் நிலை உள்ளது. ஆனால் 'பிகில் படத்திற்கு போட்டியாக சங்கத்தமிழன், கைதி, பட்டாஸ் போன்ற படங்கள் வெளியானால் பிகில் படத்தின் வசூல் குறையுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்இதில் மேலும் படிக்கவும் :