வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2019 (16:29 IST)

சினிமாவில் சம்பாதித்த பணத்தை பார்த்திபன் என்ன செய்வார் ? சமுத்திரகனி விளக்கம்

தமிழ்சினிமாவில் உள்ள முக்கியமாக நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன். இவர் இயக்கிய படங்கள் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுப்பதாக நினைக்கின்றனர். இந்நிலையில் தற்போது அவர் தயாரித்து இயக்கி நடித்துள்ள படம் ’ஒத்த செருப்பு சைஸ் 7 ‘ என்ற படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக சமுத்திரகனி கலந்துகொண்டார். அப்போது அவர் கூறியதாவது :
 
பார்த்திபனுடன் நிறைய பேசிக்கொண்டிருப்பது வழக்கம். நேரில் சந்தித்து பல விஷயங்களை விவாதிப்பேன். பல படங்களில் நடித்து சம்பாதிப்பார் அவர் . அந்த பணத்தை எல்லம் வைத்து தரமான படங்களை தயாரித்து இயக்குவதன் மூலம் மக்களுடன் பெற்றதை மக்களிடமே கொடுத்துவிடுவார் .
 
மக்களுக்கு தரமான படங்களை கொடுக்க வேண்டும் என்ற அவரது வேட்கை எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது. தற்போது அவர் இயக்கி நடித்துள்ள ஒத்த செருப்பு படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் இவ்வாறு அவர் தெரிவித்தார்.